Saturday, November 24, 2012

நவம்பர் 24  சம்மேளன தின வாழ்த்துக்கள்.

கடை வரிசை தோழனின் உணர்வுகளை உள்வாங்கி இயக்கத்தை கட்டிவளர்த்த தோழர்கள் ஞானையா, குப்தா, ஜெகன், ஆர்.கே, தமிழ்மணி, மாலி , சேது, ஜெயபால், ஆர்.வி, கடலூர் ரகு ஆகியோரின் வழிநின்று பரந்துபட்ட ஜனநாயகப் பாதையில் வெகுஜன உணர்வுகளை மதித்து செயல்படும் மாநிலச் சங்கத்தை வலுப்படுத்த சம்மேளன தினத்தில் சபதமேற்போம்.

Wednesday, November 21, 2012

  • TM  கேடருக்கான இலாகா போட்டித் தேர்வை
நடத்த BSNL கார்ப்பரேட அலுவலகம் ஒப்புதல்
  அளித்துள்ளது.


  • NFTE மத்திய சங்கத்தின்  தொடர் முயற்சியின்
காரணமாக JTO கேடருக்கான இலாகா போட்டித் தேர்வையும் நடத்துவதற்கு BSNL கார்ப்பரே ட் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.


  • புதிய அங்கீகார விதிகள்:
BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான 2வது கூட்டம் 19-11-2012 அன்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் NFTE,FNTO உட்பட 10 சங்கங்கள் புதிய அங்கீகார விதிகளின்படிதான் 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை நடத்த வேண்டும் என நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டது.
BSNLEU,TEPU மற்றும் BSNLMS ஆகிய 3 சங்கங்கள் மட்டும் பழைய விதிகளின்படி தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரியது.
புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான முன்வரைவுதனை (Proposal) நிர்வாகம் சங்கங்களிடம் கொடுத்துள்ளது.
10 நாட்களுக்குள் அதாவது 29-11-2012ந் தேதிக்குள் சங்கங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
NFTE,FNTO உட்பட 10 சங்கங்கள் இணைந்து ஒருமித்த கருத்துக்களை நிர்வாகத்தின் முன்வைப்பது என முடிவெடுத்துள்ளது.  

Saturday, November 17, 2012

  • 78.2% IDA ஊதிய நிர்ணயம்:
       DOT கேட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை BSNL  
       கார்ப்ரேட் அலுவலகம் 15ந்தேதி DOTக்கு
      அனுப்பியுள்ளது. 


  • JAO Part-II தேர்வு குறித்த தேதிகளில் நடைபெறும்.

Friday, November 16, 2012

  • புதிய அங்கீகார விதிகள்:
     BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான 2வது கூட்டம் வரும் 19-11-2012 அன்று டெல்லியில் மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

Monday, November 12, 2012

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்


தீபாவளி என்பது அரக்கனை அழித்த திருநாள் என்கிறது புராணம்.

இந்தப் பண்டிகை மனிதர்களுக்கு சொல்லும் செய்தி,நம் மனதிலிருக்கும் அரக்க குணங்கள், விலங்கு குணங்கள், தீய எண்ணங்கள் போன்ற இருளை அகற்றி.. அன்பு, வாய்மை போன்ற நல்ல குணங்களை மனங்களில் இருத்தினால், ஒளிமயமான வாழ்வு வாழலாம் என்பதுதான்!

அதுதான் இப்பண்டிகையின் அடிப்படை சித்தாந்தம்.

Monday, November 5, 2012


வெற்றிகரமாக நடந்து முடிந்த 6நாள் தொடர் உண்ணாவிரதம் 

  • BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகளை உடனடியாக BSNLஐ விட்டு வெளியேற்ற வேண்டும்.
அல்லது
  • BSNLல் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் ஊழியர்களையும் திரும்பவும் மத்திய அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 
 FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக நடைபெற்ற 6வது நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் வெற்றிகரமாக  நடைபெற்றது. அனைத்துச் சங்கங்களிலிருந்தும் பெருவாரியான தோழர்கள்,தோழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.